மொரீஷியஸ் தீவில் படமாகும் முதல் முழு இந்திய படம். கமலின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Saturday,January 23 2016]

'தூங்காவனம்' படத்திற்கு முன்பே கமல் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான லோகேஷனை மொரீஷியஸ் தீவில் பார்த்து வைத்திருந்தார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் திடீரென 'தூங்காவனம்' படத்தை தொடங்கி அந்த படத்தையும் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றிப்படமாக கமல் மாற்றிவிட்டார்.

இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் தான் ஏற்கனவே திட்டமிட்ட மொரிஷியஸ் தீவு படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகவுள்ள படத்தை அடுத்தே இந்த மொரீஷியஸ் தீவு படம் ஆரம்பமாகும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்பட்டது இல்லை என்றும் கமல்ஹாசனின் இந்த படம்தான் முழுக்க முழுக்க மொரிஷீயஸ் தீவில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'கெத்து' பட வரிவிலக்கு வழக்கு. சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கெத்து' திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது...

சிம்பு படத்தின் பத்து நாள் படப்பிடிப்பு

பீப் பாடல் விவகாரத்தில் சிக்கி சிம்பு தனது இமேஜை இழந்ததாக கூறப்பட்டாலும் அவருடைய படங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது...

பிரபுசாலமன் - தனுஷ் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ரோல் என்ன?

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது...

ஒரே நேரத்தில் அண்ணன் - தம்பி படங்களில் சந்தோஷ் நாராயணன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 60வது படம், , சந்தானம் நடிக்கவுள்ள 'சர்வம் சுந்தரம்' உள்பட பல முன்னணி நடிகர்களின்...

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்த கமல்-இளையராஜா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்து வந்தார்...