இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை...! ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.

குடியுரிமை விழிப்புணர்வு தொடர்பாக மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். மேலும் மத்திய பிரதேச முதல்வரின் வயதைக் குறித்தும் பேசினார்.

''குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம், இந்த வயதில் கத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. முதலில் மத்தியப் பிரதேசத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யுங்கள்” என விமர்சித்தார் அமித்ஷா.

More News

நீங்கள் ஒரு முட்டாள்..! பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்.

காட்டுத்தீயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களான நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட்டு வருகிறார்.

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நடிகை கைது..!

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகை மற்றும் மாடல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக யார் பேசினாலும் உயிரோடு புதைத்து விடுவேன். உ.பி அமைச்சர்..!

“நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோஷங்களை எழுப்பினால் நான் உங்களை உயிருடன் அடக்கம் செய்து விடுவேன்” என்று மிரட்டினார்.

நடிகை வீட்டில் குண்டு போடலாமே! ஈரானுக்கு யோசனை கூறிய இந்தியர் வேலைநீக்கம்!

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் வீட்டில் கொண்டு போடலாமே என ஈரானுக்கு யோசனை சொன்ன அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பேராசிரியர் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

'தர்பார்' படத்தின் நான்கு நாள் அசத்தல் வசூல் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.34 கோடியும் தமிழகத்தில் ரூ.18 கோடியும் சென்னையில்