ஒரே படத்தில் ரஜினி, கமல், மோகன்லால், சல்மான்கான்

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நான்கு மொழி மோஷன் போஸ்டரை 4 முன்னணி பிரபலங்கள் வெளியிடவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி ’தர்பார்’ படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும், மலையாள மோஷன் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களும், இந்தி மோஷன் போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிடும் நட்சத்திரம் யார் என்பது விரைவில் தெரியவரும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் ஒன்றின் மோஷன் போஸ்டரை அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் போன்ற படங்களில் இருவரும் நடித்திருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்