'சபாஷ் நாயுடு' படத்தில் அப்பா செய்த தவறு. ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது 'சிங்கம் 3', பிரேமம் தெலுங்கு, சபாஷ் நாயுடு' போன்ற படங்களில் நடித்து பிசியாக உள்ளார். இந்நிலையில் முதன்முதலாக தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'சபாஷ் நாயுடு' படத்தில் ஸ்ருதிஹாசனின் அப்பாவாக நடிக்கும் கமல், படப்பிடிப்பின்போது ஸ்ருதிஹாசனின் கேரக்டர் பெயரை சொல்லி அழைக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அப்போது கமல் ஸ்ருதிஹாசனின் கேரக்டர் பெயரை சொல்லி அழைப்பதற்கு பதிலாக ஒரிஜினல் பேரான ஸ்ருதி என்று தவறுதலாக அழைத்துவிட்டாராம். எவ்வளவு பெரிய நடிகர் அவர், அவரே இப்படி சொல்லிட்டார் என்பது செம ஹார்ட் டச்சிங் மொமண்ட் ஆக இருந்தது என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
மேலும் கவுதமியுடன் பிரச்சனை என்று வெளிவரும் செய்தி குறித்து அவர் கூறியபோது, " என் வாழ்க்கையில் என் அப்பா ரொம்ப ரொம்ப முக்கியமான மனிதர். என் சினிமா வாழ்க்கையா இருக்கட்டும், என் மைண்ட்செட்டா இருக்கட்டும் நிறைய விஷயங்களை நான் அவரைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டிருக்கேன். அப்படிப்பட்ட அப்பாவின் வாழ்க்கையில் அவருக்கு யார் முக்கியமோ, அவங்களுக்கு நான் அவசியம் மரியாதை கொடுப்பேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

More News

பிரபல இளம் நாயகனின் 4 நாயகிகள் இவர்கள்தான்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவராகிய அதர்வா, சண்டிவீரன், ஈட்டி, கணிதன் என தொடர் வெற்றி...

சாந்தனு பாக்யராஜின் 'வாய்மை' ரிலீஸ் தேதி

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் என பெயர் பெற்ற கே.பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு, கோலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும்...

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சீயான் விக்ரமுடன் நடித்த 'இருமுகன்' செப்டம்பர் 8ஆம் தேதியும், கார்த்தியுடன் நடித்த 'காஷ்மோரா'...

அஜித்துக்கு நன்றி சொன்ன அருண்விஜய்யின் தந்தை

அருண்விஜய் குறித்து கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அவர் நடித்த 'குற்றம் 23' படத்தின் இசை ...

5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

பிரபல தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை கடந்த 2012ஆம் ஆண்டு 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியவர் எம்.ராஜேஷ்...