ரசிகர்களுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை: அரசியல் அறிவிப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆவேசமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்து வருகின்றார். அதுமட்டுமின்றி கேரள முதல்வர பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்தார். விரைவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களையும் கமல் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தீவிர அரசியலுக்கு வரப்போவதாக கமல் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கமல் தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout