கொல்கத்தா பயணம் அரசியல் பயணமா? மம்தாவை சந்தித்த பின் கமல் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றும், அதனுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டமும் கமலிடம் இருந்ததாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
எனக்கு கொல்கத்தாவை பிடிக்கும், திரைப்பட விழாக்களும் பிடிக்கும். நான் ஒரு சினிமா விரும்பி மற்றும் உங்கள் முதல்வரின் ரசிகனும் ஆவேன். அரசியல் ரீதியான சந்திப்பு ஏதும் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், 'இல்லை', நான் விருந்தினராக மட்டுமே வந்திருக்கின்றேன். கடந்த முறை வந்தபோது மீண்டும் வருவேன் என்று கூறியிருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது வந்திருக்கின்றேன்' என்று கமல்ஹாசன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments