கொல்கத்தா பயணம் அரசியல் பயணமா? மம்தாவை சந்தித்த பின் கமல் பேட்டி

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றும், அதனுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டமும் கமலிடம் இருந்ததாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

எனக்கு கொல்கத்தாவை பிடிக்கும், திரைப்பட விழாக்களும் பிடிக்கும். நான் ஒரு சினிமா விரும்பி மற்றும் உங்கள் முதல்வரின் ரசிகனும் ஆவேன்.  அரசியல் ரீதியான சந்திப்பு ஏதும் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், 'இல்லை', நான் விருந்தினராக மட்டுமே வந்திருக்கின்றேன். கடந்த முறை வந்தபோது மீண்டும் வருவேன் என்று கூறியிருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது வந்திருக்கின்றேன்' என்று கமல்ஹாசன் கூறினார்.

More News

காதலரை சந்தித்தது எப்போது? திருமணம் குறித்த நமீதாவின் அறிவிப்பு

நடிகை நமீதாவின் திருமணம் குறித்து பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ரைசா வெளியிட்ட வீடியோ குறித்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகை நமீதா தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

அறம் திரைவிமர்சனம்

மாபெரும் வெற்றி பெற்ற கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கிட்ட கோபி நைனார் லேடி சூப்பர்ஸ்டார்...

'மெர்சல்' இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது

'அறம்' போன்ற படங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்: நடிகை ரேவதி கோரிக்கை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் கமல் இன்று சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கிய அரசியல்வாதிகளையும் பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.