திருச்சியில் இறங்கியது கமல் செய்த முதல் மனிதாபிமான செயல்

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று அவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் கமலுக்கு அவரது கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்

இந்த நிலையில் திருச்சியில் இறங்கியதும் கமல்ஹாசன், கடந்த மாதம் போக்குவரத்து காவலர் ஒருவரின் தகாத செயலால் உயிரிழந்த உஷாவின் வீட்டிற்கு சென்று அவரது கணவருக்கு ஆறுதல் நேரில் ஆறுதல் கூறினார். ஏற்கனவே உஷா உயிரிழந்தபோது கமல்ஹாசன், அவருடைய கணவரிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியிருந்தார் என்பதும், சென்னையில் நடந்த மகளிர் தின கூட்டத்தின்போது உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சந்திப்பின்போது அறிவித்த ரூ.10 லட்சத்தை உஷாவின் கணவரிடம் கமல் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் இந்த மனிதாபிமான செயலை சமூக வலைத்தள பயனாளிகளும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

More News

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை உதறிய வர்ணனையாளர்

காவிரி பிரச்சனை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டிய நேரம் இதுதான் என்பதை சரியாக புரிந்து கொண்ட தமிழக மக்கள்

வைகோ குற்றச்சாட்டுக்கு சீமான் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சீமான் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை பத்திரிகையாளர்கள் முன்வைத்து ஆவேசமாக பேசினார். தன்னை பற்றி ஜாதிரீதியாக மீம்ஸ் போடுவதாகவும், ஸ்டெர்லைட்

காவிரி பிரச்சனை குறித்து கமலுக்கு என்ன தெரியும்? அமைச்சர் ஜெயகுமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

என் திருமணம் நடக்க காரணமே சூர்யா குடும்பம்தான்: பிரபல காமெடி நடிகர்

சூர்யா நடித்த 'அயன்' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவருமான ஜெகன், தனது திருமணம் நடக்க காரணமே சூர்யாவின் குடும்பம் தான்

சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' படம் திடீர் நிறுத்தம்: காரணம் என்ன தெரியுமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.