தமிழகத்தை ஒளிமயமாக்க அமெரிக்க தமிழ் விஞ்ஞானியுடன் கமல் ஆலோசனை

  • IndiaGlitz, [Friday,February 09 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் அடிப்படை தேவைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை ஆராயத்தொடங்கிவிட்டார்

சமீபத்தில் ஹார்வர்டு பல்கலையில் உரையாற்ற அமெரிக்கா சென்ற கமல்ஹாசன், அங்கு தமிழக இளம் விஞ்ஞானி கே.ஆர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து பேசினார். இவர் ப்ளூம் பாக்ஸ் என்ற முரையில் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்து கொள்ளும் திட்டத்தை கண்டுபிடித்தவர்.

இந்த திட்டத்தை தமிழகத்தில் பயன்படுத்தி தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் ஏற்படுத்த தமிழக விஞ்ஞானி ஸ்ரீதருடன் கமல், அமெரிக்காவில் ஆலோசனை செய்தார். இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே பெருமையடைவதோடு, தமிழகத்தை ஒளிமயமாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இந்த முயற்சி குறித்து விஞ்ஞானி ஸ்ரீதர் கூறியபோது, இந்த திட்டத்தை தமிழகத்தில் குறிப்பாக தமிழக கிராமங்களில் செயல்படுத்துவது குறித்து கமல் கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து அவர் விரிவாக விவாதித்ததாகவும் கூறினார்.

More News

கோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்

கோலிவுட் திரையுலகில் அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் வாரிசுகள் களமிறக்கப்படுவது சர்வ சாதாரண நிகழ்வாகும்.

சிவ பெருமானின் கடும் கோபத்தால் தீ விபத்து: மதுரை ஆதீனம்

நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள சுமார் 50 கடைகளில் 35 கடைகள் தீயினால் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகையை பாராட்டி நடிகர் சங்கம் அறிக்கை

சமீபத்தில் நடிகை அமலாபால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை தொழிலதிபர் மீது தைரியமாக புகார் கொடுத்து அவரை சிறைக்கு தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று கடற்கரை, நாளை நாடு முழுவதும்: கமல் ரசிகர்கள் ஆரம்பித்த சுத்தப்பணி

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று முதல் தங்களுடைய சுத்தப்பணியை ஆரம்பித்துள்ளனர்.

இணைந்தது இரண்டு தமிழ் நடிகர்களின் கட்சிகள்

தமிழகத்தில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் தனித்தனியாகவே கட்சி ஆரம்பிக்கவுள்ளனர்.