ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும் தெரிந்ததே 

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். முதல் முறையாக தமிழக முதல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் சற்று முன்னர் முதல்வர் பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார். முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி திமுக வெற்றி பெற்றவுடன் முதல் நபராக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் தற்போது நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிஜமான டூயட்… காதல் மனைவியை வெட்கப்பட வைத்த நடிகர் தனுஷ்… வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

மம்தா பானர்ஜியை ஒடுக்க வேண்டும்… டிவிட்டரில் சர்ச்சையை கிளப்பும் பாலிவுட் நடிகை!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது தெரிந்ததுதான்.

நினைத்து கூட பார்க்க முடியாத அதிசயம்: ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் சீரியல் நடிகை ஒருவர் பணிபுரிந்தது நினைத்து பார்க்க கூட முடியாத அதிசயம் என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன

நிரம்பி வழியும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்

வந்துவிட்டது சுட்டெரிக்கும் கத்திரி வெயில்… என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மே மாதம் வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் கொணட்டாம்தான். காரணம் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு கிடைக்கும்.