close
Choose your channels

ராகுல் காந்தியை அடுத்து சோனியாவை சந்திக்கும் கமல்

Thursday, June 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகுல் காந்தியை அடுத்து சோனியாவை சந்திக்கும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை என்று குற்றம் சொல்லும் நபர்கள் வாய்பிளக்கும் வகையில் அவருடைய சமீபத்திய செயல்கள் உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாமல் நேற்று திடீரென டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார். இந்த சந்திப்பு காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரமாக கருதப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை 11 மணிக்கு சோனியாகாந்தி அவர்களை கமல் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமின்றி திமுக உள்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது..

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்க திமுக முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் என்று கருதப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment