ரஜினியை ரகசியமாக சந்தித்தது எப்போது? கமல் விடுவித்த புதிர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியலுக்கு வருவது குறித்து ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினிகாந்த் அவர்களை ரகசியமாக சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் அவர் தான் சந்தித்த தலைவர்கள் குறித்து எழுதியுள்ளார். இந்த நிலையில் அரசியல் ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினியை ரகசியமாக சந்தித்ததாக கமல் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் அதே படப்பிடிப்பு தளத்தில் 'காலா' படத்தின் படப்பிடிப்புக்கு வந்திருந்ததாகவும், அப்போது இருவரும் காரில் உட்கார்ந்து ரகசியமாக பேசியதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தான் அரசியல் முடிவு குறித்து ரஜினியிடம் தான் தெரிவித்ததாகவும், ரஜினிகாந்த் அதை கேட்டு ஆச்சரியப்பட்டு 'எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு தான், மனதளவில் முடிவெடுத்து ரொம்பநாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான் என்று பதிலளித்ததாகவும் கமல் அந்த தொடரில் எழுதியுள்ளார்.
மேலும் ‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக்கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக்கொண்டதில் முக்கியமான விஷயம் என்றும், ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்துவிடக்கூடாது என்றும் அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும் என்றும் தான் கூறியதாக கமல் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments