ரஜினியை ரகசியமாக சந்தித்தது எப்போது? கமல் விடுவித்த புதிர்

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

அரசியலுக்கு வருவது குறித்து ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினிகாந்த் அவர்களை ரகசியமாக சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் அவர் தான் சந்தித்த தலைவர்கள் குறித்து எழுதியுள்ளார். இந்த நிலையில் அரசியல் ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினியை ரகசியமாக சந்தித்ததாக கமல் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் அதே படப்பிடிப்பு தளத்தில் 'காலா' படத்தின் படப்பிடிப்புக்கு வந்திருந்ததாகவும், அப்போது இருவரும் காரில் உட்கார்ந்து ரகசியமாக பேசியதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தான் அரசியல் முடிவு குறித்து ரஜினியிடம் தான் தெரிவித்ததாகவும், ரஜினிகாந்த் அதை கேட்டு ஆச்சரியப்பட்டு 'எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு தான், மனதளவில் முடிவெடுத்து ரொம்பநாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான் என்று பதிலளித்ததாகவும் கமல் அந்த தொடரில் எழுதியுள்ளார்.

மேலும் ‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக்கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக்கொண்டதில் முக்கியமான விஷயம் என்றும், ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்துவிடக்கூடாது என்றும் அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும் என்றும் தான் கூறியதாக கமல் தெரிவித்தார்.

More News

13 வருடங்களுக்கு பின் கமல்-ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினியும் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்

கமல்ஹாசனுக்கு டி.என்.சேஷன் கொடுத்த மதிப்பு மிகுந்த டைட்டில்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் கொள்கையையும் அறிவித்தார்.

கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு கமலின் பதில்களும்:

கமல் பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டு விளக்கு. ஊழல் காற்றில் அனையாமல் பார்த்த் கொள்ளுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் முழு உரை:

37 வருடங்களாக அமைதியாக நற்பணிகள் செய்து கொண்ட கூட்டத்தின் கூர்முனைகளை பார்த்தீர்கள். அதற்கு பின்னால் எத்தனையோ ஆயிரம், லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் இது

ஒரே காரில் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால்: பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டனர்

கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கிய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர்