கமல் -மணிரத்னம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்.. ரசிகர்கள் உற்சாகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து ’நாயகன்’ என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைய உள்ள படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தது.
’கமல்ஹாசன் 234’ என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த முக்கிய அப்டேட்டை நேற்று கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அறிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கும் படத்தின் டீசர் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது, இந்த டீசர் நவம்பர் 7ஆம் தேதி உங்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ’கமல் 234’ படத்தின் டீசர் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் என்பது உறுதி ஆகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
OFFICIAL: #KH234 - First Look Teaser will be released on Ulaganayagan #Kamalhaasan's Birthday Nov 7..
— Chinna Chinna Asai (@chennaitodaynew) October 23, 2023
Shoot for the Teaser happened yesterday..
Regular Shoot to commence in Early 2024..📷#Manirathnam | #ARRahman #kamal234 #KamalHaasan𓃵 #kamal233 #kamalhasan #ulaganayagan pic.twitter.com/QYELDkif4o
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com