ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது. பேரி கிரில்ஸ் சுவராசியமாக தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை பார்க்க முடிந்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்
அடர்ந்த காட்டுக்குள் செல்வது, இரும்பு கம்பியை பிடித்துக்கொண்டு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்வது, இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்வது உள்ளிட்ட பல சாகசங்களை தலைவர் நிகழ்த்தியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே அவரது நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் வீடியோ ஒன்றில் மேலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் மாதவன் ’எந்த ஆபத்து வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான், அடித்து தூள் கிளப்புங்க’ என்று வாழ்த்தினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’2.0’ படத்தில் நடித்த பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமாரும் அச்சமின்றி உங்கள் பயணத்தை தொடங்குங்கள் உங்கள் வழி தனி வழி’ என்று கூறி வாழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments