இன்று முதல் போரை தொடங்குகிறது மக்கள் நீதி மய்யம்: கமல் அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,July 03 2020]
உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது பல டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருடைய டுவிட்டுக்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவீட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாமானியர்களை காவல்துறையினர் தாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு போரை இன்றுமுதல் தொடங்குவதாக கமலஹாசன் அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
கமலஹாசனின் இந்த புதிய முயற்சி வெற்றி அடையும் என அவரது கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
— Kamal Haasan (@ikamalhaasan) July 3, 2020
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.