அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'களம் நமதே'.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ’களம் நமதே’ என்ற தீம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் என்பதும் அதன் பிறகு விளையாட்டுத்துறைக்கு பல முக்கியத்துவங்கள் கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை ’களம் நமது’ என்பது குறித்த தீம் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தமன் இசையில் உருவான இந்த பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் பகிர்ந்து உள்ளார். மேலும் விளையாட்டு துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி அவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும்.
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2023
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments