'இந்தியன் 2' தாமதத்திற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம்: நீதிமன்றத்தில் ஷங்கர் பதில் மனு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு இடையிடையே தாமதமாகி வந்தது என்பதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஷங்கர் பல முயற்சிகள் எடுத்தும் தயாரிப்பு தரப்பிலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து ஷங்கர் வேறு வழியில்லாமல் ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்குவதற்கு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது ஷங்கர், லைகா ஆகிய இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக முடிவு எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் ஷங்கர்-லைக்கா பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தற்போது இந்த வழக்கை மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஷங்கர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார். அந்த பதில் மனுவில் ’இந்தியன் 2’ படம் தாமதத்திற்கு லைகா நிறுவனமே காரணம் என்றும் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் போது ஏற்பட்ட அலர்ஜியும் இன்னொரு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments