கமல் தமிழ்நாட்டின் தகுதியான தலைவர் அல்ல! அமீர்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஆகியவை, பலருக்கு முதல்வர் கனவை தோற்றுவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது ஆளுமையுள்ள தலைவர் இல்லாத காரணத்தால் அந்த இடத்தை நிரப்ப பலர் முயற்சி செய்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்பது குறித்து இயக்குனர் அமீர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளிதார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'தமிழகத்தின் இப்போதைய தேவைக்கு கமல் தகுதியான தலைவர் இல்லை. அதிமுகவை விமர்சனம் செய்வதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் பிரச்சனை அவருக்கு இரண்டாம் பட்சமாக உள்ளது. டுவிட்டரில் மட்டும் கருத்து கூறினால் போதுமா? தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேர்களுக்கும் டுவிட்டர் அக்கவுண்ட் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இப்போதைக்கு தெளிவான கொள்கைகளும் சிந்தனையும் கொண்ட சீமானே தலைமை பொறுப்புக்கு தகுதியானவர். விஜய்க்கு நல்ல மாஸ் இருந்தாலும் அவருடைய வயது மற்றும் அவர் படங்களின் வெற்றியை கணக்கிடும்போது அவர் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments