கமல் எனக்கு எதிரி கிடையாது: ரஜினிகாந்த் பேட்டி

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரி கிடையாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

காவிரி பிரச்சனைக்காக இன்று நடிகர் சங்கம் நடத்தும் அறவழி போராட்டத்தில் கலந்து கொள்ள தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணடித்து வருகிறது. தமிழக மக்கள் அனைவரின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான். அதனை விரைவில் அமைக்காவிட்டால் அனைத்துத் தமிழர்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும்’

பின்னர் ஐபிஎல் போட்டியை நிறுத்த சில கட்சி தலைவர்கள் கூறிவருவது குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், 'மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமான சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம். இதன்மூலம் தமிழக மக்களின் போராட்டம் தேசியளவில் கவனத்தை ஈர்க்கும். இதற்கு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படியில்லையெனில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போகும் தமிழக ரசிகர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு மைதானத்துக்குச் செல்லலாம். இந்தப் சூழலில் சென்னையில் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் நல்லதுதான்’ என்று கூறினார்.

மேலும் ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என்னுடைய எதிரி கிடையாது. என்னுடைய எதிரி ஏழ்மை, லஞ்சம், வேலையின்மைதான்' என்று கூறிய ரஜினி. பேசிப் பேசியே நிறைய அரசியல் செய்து விட்டோம். நிறைய பேசினால் நிறைய எதிரிகள் தான் வருவார்கள் என்று கூறி தனது பேட்டியை முடித்து கொண்டார்.

More News

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது.

விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்

வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ

நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.

'காலா' படக்குழுவினர்களின் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது இயக்குனரின் உதவியாளர்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது