எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் இவர்தான் : ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Monday,August 22 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த பல ஆண்டுகளாக உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர். கமல்ஹாசனுக்கு விருது கிடைக்கும்போது ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிப்பதும், ரஜினிக்கு பத்ம விருதுகள் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசன் வாழ்த்துவதும் வழக்கமான ஒன்றாகும்
இந்நிலையில் பிரான்ஸ் அரசு நேற்று கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கி கெளரவித்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்' என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் பதிவு செய்த இந்த டுவீட் ஒரு மணி நேரமே ஆன நிலையில் இந்த பதிவுக்கு 1,300 ரீடுவிட்டுகளும், 2,500 லைக்குகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

— Rajinikanth (@superstarrajini) August 22, 2016

More News

ரஜினியின் டுவீட்டை படித்ததும் கண்ணீர் வந்துவிட்டது. சொன்னது யார் தெரியுமா?

இந்தியாவின் வெள்ளி மங்கை என்று போற்றப்படும் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் முதல் பாமரர் வரை வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, 'நான் சிந்துவின் ரசிகர்' என்றும் பெருமையுடன் கூறியிருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் 'தி கிரேட் ஃபாதர்' படத்தில் ஆர்யா

தமிழ் திரையுலகின் ரொமான்ஸ் நாயகன் என்று அழைக்கப்பட்ட ஆர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக நேரம் சரியில்லை போலும். கடந்த 2013-ல் வெளியான 'ராஜா ராணி' படத்திற்கு பின்னர் வெளியான ஆர்யாவின் படம் எதுவும் எதிர்பார்த்த வசூலை தரவில்லை

சிம்புவுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டி போலவே தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஆரம்பிக்கப்படுள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) போட்டிகள் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது.

'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் கமல்-ரஜினி-அஜித்-விஜய் உண்டா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில் நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடம் கட்டும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தாவுக்கு என்ன கேரக்டர்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.