அரசியலுக்கு வர விஜய்க்கு அழைப்பு விடுத்த கமல்

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

கமல்ஹாசன், ரஜினிகாந்தை அடுத்து விஜய் அரசியலில் குதிப்பார் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி நடத்தி வரும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் விஜய் அரசியலுகு வந்தால் அவரை வரவேற்பீர்களா? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், 'எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார். 

கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று நடிகர் விஜய் அரசியலில் குதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் கூறவுள்ள நல்ல செய்தி

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சுதந்திரதின விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.

அட்டகாசமாக வெளியான ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. பத்து படத்தில் நடித்திருந்தால் கூட கிடைக்காத புகழை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒருசில நாட்களில் ஓவியா பெற்றுவிட்டார்

'அவன் இவன்' படப்பிரச்சனை: ஆர்யாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

படப்பிடிப்பு தளத்தில் நாசரின் நல்ல முயற்சி

பொதுவாக சினிமாக்காரர்களுக்கு படப்பிடிப்பு நடத்த இடம் கொடுத்தால் அந்த இடத்தையே அசுத்தமாக்கிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பலர் படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பதில்லை.

முழுநேர அரசியல்வாதியாக மாறும் பிரபல நடிகர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.