போராட்டம் நடத்தி திரும்பி வந்த விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர்

  • IndiaGlitz, [Sunday,December 02 2018]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளும் போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று டெல்லியே ஸ்தம்பித்தது. குறிப்பாக தமிழக விவசாயிகள் சிலர் நடத்திய நிர்வாண போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டெல்லி போராட்டத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றார். விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர் கமலுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர். பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை சந்தித்த பின் கமல் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் என்று கூறினார்.

மேலும் கஜா புயல் நிவாரண பணிகளை அரசு சரியாக செய்யவில்லை என கூறுவதை எதிர்க்கட்சியின் குரலாக பார்க்காமல், மக்களின் குரலாக பார்க்க வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.

 

More News

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா

சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு,

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

'மரண மாஸ் தலைவர் குத்து' பாடலை பாடியவர்கள் யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

அரசியல் மிகப்பெரிய ஆபத்தான விளையாட்டு: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார்.

உலக அளவில் டுவிட்டர் செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர்

2018ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.