கமல் அறிமுகம் செய்துள்ள விசில்: இன்று முதல் ஆரம்பம்
- IndiaGlitz, [Tuesday,November 07 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு செயலி ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர் சற்றுமுன்னர் அந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்
கமல் அறிமுகம் செய்துள்ள செயலியின் பெயர் 'மையம் விசில்'. இந்த செயலி வெறும் ஆப் மட்டுமல்ல என்றும், இது ஒரு பொது அரங்கம் என்றும் இந்த செயலி மூலம் எந்த குறைபாடுகள் குறித்தும் ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டுவிட்டரில் #theditheerpomvaa (தேடி தீர்ப்போம் வா), #maiamwhistle, #virtuouscyles போன்ற ஹேஷ்டேக்கையும் கமல் அறிமுகம் செய்துள்ளார். இந்த ஹேஷ்டேன்க்குகளில் மக்கள் பிரச்சனைகள் குறித்து அனைவரும் பேசலாம் என்றும், இவற்றில் ஏதாவது தவறு இருந்தால் தன்னிடம் சுட்டிக்காட்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் டுவிட்டர், செயலி மட்டுமின்றி மக்களை நேரடியாக சந்திக்க விரைவில் ஒரு சுற்றுப்பயண திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும், இந்த சுற்றுப்பயணம் தான் இன்னும் கற்று கொள்வதற்காக என்றும், நல்ல தமிழகத்தை உருவாக்குவதே தனது கனவு என்றும் கமல் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நல்லது செய்வதை கூட ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.