அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டு வரும் கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமல் அவர்கள் தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்புக்கும், திரைக்கதைக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதற்கு இணையாக தொழில்நுட்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
குறிப்பாக படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப சவுண்ட் அமைப்பில் அவர் சிறப்பு கவனம் செலுத்துவார். சமீபத்தில் வெளியான விஸ்வரூபம், உத்தமவில்லன் ஆகிய படங்களுக்காக அமெரிக்கா சென்று வாரக்கணக்கில் அங்கேயே தங்கியிருந்து ஒலி அமைப்பு பணிகளை கவனித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஒவ்வொரு படத்திற்கும் ஒலி அமைப்புக்காக அமெரிக்கா சென்று வருவதை தவிர்க்க இந்தியாவிலேயே ஒலி அமைப்புக்கான ஸ்டுடியோவை அமைத்தால் தனது படங்களுக்கும் மற்ற இந்திய படங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கமல் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் அதி நவீனக் கருவிகளுடன் கூடிய சவுண்ட் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout