3 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? கமல்ஹாசன் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

சமீபத்தில் நடந்த ‘இந்தியன் 2’ விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்த நிலையில் விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

சகோதரர்களுக்கு நான் சொல்லும் கடமையாக இங்கே காவல்துறையில் எனக்குத் தெரிந்த விவரங்களை எடுத்துச் சொல்வதற்கும், எங்கள் துறையில் இதுபோன்ற விபத்துகள் இனி நிகழக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சியின் முதல் கட்ட முயற்சியாகவே இந்தச் சந்திப்பைக் கருதுகிறேன்.

நேற்று திரையுலகைச் சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இதுகுறித்துப் பேசினேன்.

இனி இதுபோன்று நடக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் ஏதாவது பரிந்துரைகள் இருப்பின் தெரிவிக்கலாம். அதையும் நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் எங்கள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அது குறித்த விவரங்களை நான் உங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்வேன்”.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.