கமல்ஹாசனின் அடுத்த பட படப்பிடிப்பு ஆரம்பம்

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய துஷ்யந்த் 'ஈஷான் புரடொக்ஷன்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தை தயாரித்து வருவது குறித்த தகவல்களை ஏற்கனவே பகிர்ந்திருந்தோம். மேலும் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தோம்.


இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் கமல்ஹாசனுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா ஜாவேரி, பூஜா குமார், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் மலேசிய படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை அமுதேஸ்வர் என்பவர் இயக்கி வருகிறார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவாளராகவும் கெவின் படத்தொகுப்பாளராகவும் இந்த படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

விஜய்சேதுபதி, ராதிகாவுக்கு தேசிய விருது. பிரபல இயக்குனர் தகவல்

'தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி தற்போது 'தர்மதுரை' ...

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தலைப்பு

'கும்கி' படத்தில் அறிமுகமாகிய விக்ரம் பிரபு அதனை அடுத்து அரிமாநம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இவன் வேற மாதிரி...

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே வில்லன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில்...

தஞ்சை விவசாயிக்கு குவியும் திரையுலக உதவிகள்

தஞ்சை விவசாயி பாலன் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் அவரை காவல்துறையினர் தாக்கியதாக...

'24' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி-நேரம்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ''24'' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை...