கஜா புயல் பாதித்த களத்தில் கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்பை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து நிவாரண பணிகளை வழங்கி வரும் நிலையில் இன்று காலை கஜா புயல் நிவாரண பணிகளை பார்வையிட நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் டெல்டா மாவட்டங்களுக்கு சென்றார்.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்று கமல், அங்கிருந்து காரில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றிருக்கும் நிலையில் நிவாரண பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
தஞ்சையை அடுத்து நாகை உள்பட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் அவர் செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ' நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட வேண்டும். எங்கள் கட்சி அரசுடன் இணைந்து நிவாரண பணிகளை செய்ய தயார்' என்று கமலஹாசன் கூறினார்.
Kamalhaasan in cyclone affected areas of Tanjore! #NammavarInField #MNMForDelta #MNMForGaja #MNMReliefWorks pic.twitter.com/Nj5krESQoy
— KamalHaasan - KamalismForever (@KamalismForever) November 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout