மழைக்கால உதவிகள் குறித்து ரசிகர்களுக்கு கமல் முக்கிய அறிவுரை

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்ததால் தமிழகத்தின் பெரும்பகுதி வெள்ளக்காடாகியுள்ளது.

இந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் தமிழக அரசு அதிகாரிகள், தேசிய பேரிடை மீட்பு படையினர், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மீட்புப்பணியை கவனித்து வருகின்றனர்., 

அதுமட்டுமின்றி நடிகர்களின் ரசிகர்களும் மழைமீட்புப்பணியில் உள்ளனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மழை மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் தனது ரசிகர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். 'இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள்.  ஆபத்திற்கு பாவமில்லை' என்று கூறியுள்ளார். மேலும் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

More News

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' சென்சார் தகவல்கள்

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள 'அண்ணாதுரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டுள்ளது

அரசியல் அறிவிப்புக்கு பதிலாக அதிரடி அறிவிப்பு: கமலின் விஸ்வரூபம்?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்,. இந்த நாளில் அரசியல் குறித்த அதிரடி அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்து தீவிரவாதம் குறித்த சர்ச்சை: கமல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு?

உலகநாயகன் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார் என்பது தெரிந்ததே.

மழை வெள்ளம் மீட்புப்பணி: களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி, நாசர் குழு

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடு போல் காட்சி அளிக்கின்றது.