ஜனவரி முதல் ஒவ்வொரு அறிவிப்பாக வரும்: அரசியல் வருகை குறித்து கமல் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை அடுத்து தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கமல்ஹாசன் கூறிய கருத்துக்களை இங்கே பார்ப்போம்
*கட்சி தொடங்குவதற்கான ஆயத்தங்களை தொடங்கிவிட்டேன். சினிமா எடுக்கவே ஆறு மாதங்கள் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், கட்சி என்பது அதைவிட பெரிய பணி. ஜனவரி மாதம் முதல் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
*அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லிவிட்டேன். கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் நான் தேர்தலுக்கு தயாராக வேண்டும், பின்னர்தான் தேர்தலை சந்திக்க வேண்டும். .
*இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இந்தி விரோதி என்றுதான் நான் சித்தரிக்கப்படுகிறேன். எந்த மதமானாலும், எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது;
*நான் நாத்திகன் இல்லை பகுத்தறிவாளன், பிராமண சமுதாயத்தை நான் தேடி போனதே கிடையாது, எல்லா சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர், சமூகம் பார்த்து நட்பு கிடையாது
*234 தொகுதிகளிலும் தவறு செய்யாதவர்களுக்கே முன்னுரிமை: வெற்றியை நோக்கிய நகர்வு மட்டுமே, இதுவே முன்னேற்றம்தான்
*நான் தொடங்கும் பணி எனக்கு பின்னாலும் தொடர வேண்டும். எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments