சென்னை மருத்துவமனையில் கமல் அனுமதி

  • IndiaGlitz, [Thursday,July 14 2016]

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று இரவு தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியில் இறங்கி வரும்போது கால்தவறி கீழே விழுந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவருடைய கால்மூட்டு மற்றும் முதுகுதண்டு பகுதியில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்று இரவே கமலுக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது கமல் உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் சிலகாலம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் குணமாகி வீடு திரும்பியதும்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

More News

Adhik reveals interesting details of Shriya's character in 'AAA'

Actor Silambarasan has started shooting for his mega project 'Anbanavan Asaradhavan and Adangadhavan' directed by Adhik Ravichandran of 'Trisha Illana Nayanthara' fame. The shooting has been progressing for the past five days...

'த்ரிஷ்யம்' - 'முத்தின கத்தரிக்கா' படங்களுக்குள் என்ன கனெக்சன் என்ன தெரியுமா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லான், மீனா நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது மட்டுமின்றி கிட்டத்தட்ட...

'தலைகாலு புரியலை' : சசிகுமாருடன் இணைந்த கவுதம் மேனன்

சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக நடித்த 'கிடாரி'...

காதலை தவிர்த்த நயன்தாராவும் த்ரிஷாவும்

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் த்ரிஷாவும் நயன்தாராவும் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவின் 'AAA' படத்தில் ஸ்ரேயாவின் கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...