பிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கமலஹாசன் அவருடைய சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார். சிகிச்சை செலவை ஏற்றுக் கொண்டதோடு, பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் கமலஹாசன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி அவரை தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நிலை எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பொன்னம்பலம் விரைவில் பூரண குணமடைந்து திருப்ப வேண்டும் என்றும் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே கமலஹாசனின் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ உள்பட பல திரைப்படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு உலக நாயகன் கமல்ஹாசன் உதவி
— Diamond Babu (@idiamondbabu) July 9, 2020
ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. (1/2) pic.twitter.com/gawbumjZVV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com