close
Choose your channels

கமல்ஹாசன் எழுதி வரும் ஸ்கிரிப்ட் யாருக்காக? அவரே அளித்த பதில்!

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும், இந்த ஸ்கிரிப்ட் பிரபல மலையாள இயக்குனர் ஒருவருக்காக எழுதி வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருவதாகவும் இதனை அடுத்து இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தின் பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ’விக்ரம்’ படம் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும் ‘விக்ரம்’ ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு பிரபல மலையாள இயக்குனர் மற்றும் எடிட்டர் மகேஷ் நாராயணன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், அவருக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் மற்றும் எடிட்டர் மகேஷ் நாராயணன், கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ உள்பட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார் என்பதும் சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment