'காந்தாரா'வில் அந்த படத்தின் சாயல் உள்ளது: ரிஷப் ஷெட்டிக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ’காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’காந்தாரா’ பாடத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ ரிஷப்ஷெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்றாலும் நிறைய பேருக்கு கடவுள் தேவைப்படுகிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நம் புராணங்களில் உள்ள கடவுள் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். திராவிட இனத்தில் நாம் ஒரு தாய் வழி சமூகம், உங்கள் படத்தின் இறுதி காட்சியில் அது நன்றாக தெரிகிறது. தந்தையை விட தாயாக கடவுள் நடந்து கொள்கிறார், அப்படித்தான் உங்களுடைய படைப்பு ஒரு உன்னதமான அந்தஸ்தை பெறுகிறது.
எம்டி வாசுதேவன் நாயரின் ‘நிர்மால்யம்’ என்ற படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று எனக்கு தெரியும். உங்கள் படத்தில் அந்த படத்தின் சாயல்கள் உள்ளன. ’காந்தாரா’ படத்தின் சாதனையை நீங்கள் அடுத்த படத்தில் முறியடிக்க வேண்டும்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் எழுதிய இந்த கடிதத்தை பிரேம் போட்டு ரிஷப் ஷெட்டி பாதுகாத்து வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
It means a lot to receive such a lovely message from Legend of Indian Cinema. Too overwhelmed and awestruck to see this surprise gift from Kamal sir.🙏
— Rishab Shetty (@shetty_rishab) January 13, 2023
Thanks a ton for this precious gift sir ❤️ @ikamalhaasan ❤️ @KantaraFilm @hombalefilms #Kantara #KamalHaasan pic.twitter.com/D21oxUroK5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments