வேற லெவல் குத்துப்பாட்டை எழுதினாரா கமல்ஹாசன்? 

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்றும் ’பத்தல பத்தல’ என்று தொடங்கும் அந்த பாடலில் ஒரு மரண குத்து பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் கமல் ஹாசன் பாடல் வரிகளில் அவரே பாடியிருக்கும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பாடல் அனேகமாக கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கமல் ரசிகர்கள் இந்த பாடலை வரவேற்க பெரும் ஆர்வத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.