close
Choose your channels

சவால்களை தகர்த்தெறியும் வீரப்பெண்மணிகள்: கமல்ஹாசனின் மகளிர் தின வாழ்த்து

Sunday, March 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மார்ச் 8 தினமான இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும். தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மக்கள் நீதி மய்யம் என்றும் பெண்களுக்கான கட்சி என்றும், அதை ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் வலியுறுத்தி வருவதாகவும், மாநில பொது செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என பெரிய பதவிகளை மகளிருக்கு கொடுத்து அரசியல் பழக வைத்தவர் என்றும் நெட்டிசன்கள் கமல்ஹாசனுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment