தேசிய விருது பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்..! என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய விருதுகள் பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டுமே உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். தமிழில் விருது பெற்றவர்களுக்கு கூட கமல்ஹாசன் வாழ்த்து கூறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ’புஷ்பா’ திரைப்படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:

புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக! என்று தெரிவித்துள்ளார்.

இதே ’புஷ்பா’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுன் அவர்களுக்கு கிடைத்தது. அவருக்கு கூட கமல் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல் தமிழில் விருது பெற்ற மாதவன், மணிகண்டன், நல்லாண்டி, ஸ்ரேயா கோஷல் ஆகியோர்களுக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தேசிய விருது பெற்றவர்களில் தேவிஸ்ரீ பிரசாத் ஒருவருக்கு மட்டுமே அவர் வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் உலக கோப்பை செஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.