'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ்.. கமல் சொன்னது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருந்தாலும் வீடியோ கால் மூலம் ஜவான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய் உள்பட ஒரு சிலர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட கமல், விஜய் இருவரும் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு ’ஜவான்’ திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இந்திய அன்பின் அடையாளம் தான் ஷாருக்கான் என்று பாராட்டினார். அதேபோல் தமிழ் படங்களில் மட்டுமின்றி பாலிவுட் வரை சென்று படம் இயக்கிய அட்லியையும் அவர் பாராட்டினார். அட்லீ இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ படத்தின் பூஜையில் தான் கலந்து கொண்டதை குறிப்பிட்ட கமல் அவரது வளர்ச்சியை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர்கள் குறித்தும் கமல் நெகிழ்ச்சியாக பேசியது படக்குழுவினர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
SRK is an icon of love for India. I want this film to succeed. I’m so happy for #Atlee. I was there at the Pooja of his first film with RajaRani#KamalHaasan came live to give best wishes to the #Jawan and team#ShahRukhKhan #JawanPreReleaseEvent #KamalHaasan𓃵 pic.twitter.com/oG4XWxcJjP
— Nammavar (@nammavar11) August 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments