துணை முதலமைச்சர் ஆனார் உதயநிதி.. கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவருக்கு கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன் கவர்னர் மாளிகையில் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூறியிருக்கும் வாழ்த்து செய்தி இதுதான்:

வாழ்த்துக்கள், உதயநிதி ஸ்டாலின் அவர்களே! நீங்கள் துணை முதலமைச்சராக உயர்ந்து உள்ளீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதி எடுத்துக் கொண்டுள்ளீர்கள். அவர்களுக்கு உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன், என தெரிவித்துள்ளார்.

More News

'கில்லி' ரீரிலீஸ் வசூல் சாதனையை முறியடித்த படம்.. குவியும் கோடிகள்..!

விஜய், திரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரீரிலீசின் மூலம் 26 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள்

ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் விஜய்க்கு மனைவியாக நடிக்கிறாரா? 'தளபதி 69' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகை, விஜய்க்கு மனைவியாக 'தளபதி 69' படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

'குட் பேட் அக்லி' படத்தின் வில்லன் இவரா? 'வேதாளம்' படத்தில் மிரட்டினாரே..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு

'தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்

இந்த அடி அடிக்கிறாங்களே.. என்னடா இது கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்'