close
Choose your channels

துணை முதலமைச்சர் ஆனார் உதயநிதி.. கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் வாழ்த்து..!

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவருக்கு கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன் கவர்னர் மாளிகையில் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூறியிருக்கும் வாழ்த்து செய்தி இதுதான்:

"வாழ்த்துக்கள், உதயநிதி ஸ்டாலின் அவர்களே! நீங்கள் துணை முதலமைச்சராக உயர்ந்து உள்ளீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதி எடுத்துக் கொண்டுள்ளீர்கள். அவர்களுக்கு உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment