close
Choose your channels

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முந்திய கமல்ஹாசனின் அறிவிப்பு

Saturday, December 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் சற்றும் நேரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார். ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது

இந்த நிலையில் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன்னர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.' என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை காரசாரமாக தெரிவித்து கொண்டிருந்த நிலையில் விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக அவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி இன்று தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் முன்பே கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார். அதேபோல் அரசியல் குறித்த அறிவிப்பையும் விரைவில் அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment