அமெரிக்க நேரப்படி ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்

  • IndiaGlitz, [Wednesday,December 13 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது ரசிகர்களும், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும், அரசியல்வாதிகளும், சந்திரபாபு நாயுடு, மம்தாபானர்ஜி உள்பட ஒருசில மாநிலங்களின் முதல்வர்களும், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் ரஜினியின் 40 ஆண்டுகால நண்பர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிக்காத நிலையில் நேற்றிரவு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். 'விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இப்போதுதான் 12ஆம் தேதி பிறந்துள்ளதால் தற்போது வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளனர்.

More News

'அருவி'யை கொண்டாடும் பத்திரிகையாளர்கள்

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுகம் ஆதித்திபாலன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'அருவி'.

துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் ஆசி பெற்ற நட்சத்திர தம்பதி

சமீபத்தில் கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் திருமணம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது.

ரிலீசுக்கு முன்பே 'வேலைக்காரன்' படத்தை பார்த்து பாராட்டிய அதிகாரிகள்

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர்களை தவிர அந்த படத்தை பார்ப்பது சென்சார் அதிகாரிகள் மட்டுமே. பொதுவாக சென்சார் அதிகாரிகள் தங்கள் கடமையின் பொருப்பு கருதி படத்தை விமர்சனம் செய்வதோ,

கவுசல்யா தந்தை உள்பட 4 பேர்களுக்கு தூக்குதண்டனை: முழுவிபரம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவருடைய அரசியல் பார்வையும்...

இன்றைய தமிழகம் ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. ஆளுமை அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவும்,....