காரண பெயராக்கிய பெரியவர்: நல்லகண்ணுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று தனது 93வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நல்லக்கண்ணு அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியவதாவது

இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார... என்று கமல் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த அன்பேசிவம் படத்தில் 'நல்லா ' நல்லசிவம் என்ற பெயரை நல்லக்கண்ணு மேல் உள்ள மரியாதையால் கமல் வைத்ததாகவே கூறப்படுகிறது

 

More News

வசனமே இல்லாம டீசர் அவ்ளோ பேசுது: விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற படக்குழு

சமுத்திரக்கனி, சுனைனா இணைந்த நடித்த படம் 'சில்லு கருப்பட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்துவில் இருந்து முஸ்லீமாக மாறிய ஹன்சிகா

நடிகை ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

போஸ்டர்களை கிழிக்கிறது என்னோட வேலையில்லை: உதயநிதி

திமுகவினர் என்னை முன்னிலை படுத்தி போஸ்டர் அடிப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது. அவ்வாறு அடிக்கும் போஸ்டர்களை கிழிப்பது என்னோட வேலையில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனுஷின் 'அசுரன்' படத்தில் இணையும் பிரபலம்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் 'அசுரன்' என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

யோகிபாபு எடுக்கும் 3வது அவதாரம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு தற்போது ஹீரோவுக்கு இணையான முக்கிய வேடங்களில் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.