மு.க.ஸ்டாலின் அவர்களை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் முக ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் சற்று முன்னர் தனது டுவிட்டரில் முக ஸ்டாலின் அவர்களை வியந்து வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது: விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.