மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் கமல் இன்று சந்திப்பு
- IndiaGlitz, [Friday,November 10 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கிய அரசியல்வாதிகளையும் பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களை சமீபத்தில் சந்தித்த கமல்ஹாசன் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கொல்கத்தாவில் 23வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 10 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 65 நாடுகளின் 144 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று கொல்கொத்தா செல்கிறார். திரைப்படவிழாவில் பங்கேற்ற பிறகு கமல்ஹாசன் மேற்குவங்க முதல்வர் மம்தாவை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிறமாநில முதல்வர்களை கமல் சந்தித்து வருவதை பார்க்கும்போது அவர் தேசிய அரசியலிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.