close
Choose your channels

கர்நாடக முதல்வருடன் கமல் சந்திப்பு! 'காலா' குறித்து பேசுவாரா?

Monday, June 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் இன்று மீண்டும் அவரை சந்திக்க பெங்களூர் செல்கிறார்

இந்த சந்திப்பின்போது அவர் கர்நாடக முதல்வரிடம் காவிரி விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து கமல் கூறியபோது, 'இந்த சந்திப்பின்போது கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விசயமாக குமாரசாமி அவரக்ளிடம் பேசப்போவதில்லை. படங்கள் வெளியிடுவதை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள்” என சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்

மேலும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதி தான் என்றும், போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள், நிறுத்தவும் கூடாது என்றும் கூறிய கமல்ஹாசன் இந்த கருத்தை நானாக கூறுவதில்லை என்றும் மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் சட்டப்பேரவைக்கு மீண்டும் செல்ல திமுக தீர்மானித்துள்ளது நல்ல முடிவு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment