விஜய் அரசியல் வருகை குறித்து கமல் கூறிய மாறுபட்ட கருத்துக்கள்

  • IndiaGlitz, [Friday,October 05 2018]

சமீபத்தில் நடந்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் கலந்து விஜய் பேசிய பேச்சு கடந்த மூன்று நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் வருகை குறித்து கிட்டத்தட்ட அனைத்து கட்சியினர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் களத்தில் இறங்கிய நடிகர் கமல்ஹாசன் விஜய் அரசியல் வருகை குறித்து கூறியபோது, 'விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான். அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்' என்று கூறியுள்ளார்.

இதே கமல்ஹாசன் தான் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில், 'விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இருட்டு அறை' பிம்பம் உடைந்துவிட்டது: யாஷ்கா ஆனந்த்

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா, ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர். குறிப்பாக டாஸ்க்குகளை வெறித்தனமாக விளையாடி தனது பலத்தை நிரூபித்தார்.

தொடர்மழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பெய்து கொண்டிருந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளும் விடுமுறை

சென்னை மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து ஆரம்பத்திலேயே அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

'நோட்டா' நாயகனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து

அர்ஜுன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'நோட்டா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

'ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட் லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன் பார்த்தோம்