நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்க.. அசீமை நேரடியாக கண்டித்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற டாஸ்க் நடந்த நிலையில் இதில் பல போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் வெளியே தெரிந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக அசீம், மகேஸ்வரி, அசல் கோலார் ஆகியவர்களின் இன்னொரு பக்கத்தையும் விக்ரமன், தனலட்சுமி போன்றவர்களை நியாயமான பக்கத்தையும் எடுத்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனலட்சுமியிடம் மோசமாக நடந்து கொண்டது மட்டுமின்றி விக்ரமன், அமுதவாணன் ஆகியவர்களையும் கேலியும் கிண்டலுமான உடல் மொழியுடன் அசீம் பேசினார் என்பதும் குறிப்பாக உடல் மொழியால் கேலி செய்தது அருவருக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று வெளியான புரமோ வீடியோவில் கமல் நேரடியாகவே அசீமை கண்டிக்கும் காட்சிகள் உள்ளது. அதில் கமல்ஹாசன், ‘அசீம், உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை, கண்டிக்கின்றேன். யாருக்காக தெரியுமா? உங்கள் பையனுக்காக.

அல்லது இதுதான் என்னுடைய விளையாட்டு தந்திரம் என்றால் நீங்கள் சொன்னால் நான் மற்றவர்களிடம் அசீமிடம் விழிப்பாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன். உங்களை அவமானப்படுத்துவார், உங்களை கேலி செய்வார், அதனால் நீங்கள் தயாராக இருந்து கொள்ளுங்கள் என அவர்களிடம் சொல்லுவேன். அதற்கு தயார் என்றால் நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்? மக்களும் செய்ய வேண்டியதை செய்வார்கள்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

கமல் இந்த அளவுக்கு ஒரு பிக்பாஸ் போட்டியாளரிடம் எந்த சீசனிலும் ஆவேசப்பட்டது இல்லை என்பதால் கமலின் ஆவேசம் அசீமுக்கு மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சரியான நேரத்தில் கண்டிப்பதில் கமல் வல்லவர் என பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.