நடவடிக்கை கடுமையாக இருக்கும்: கட்சி நிர்வாகிகளுக்கு கமல் எச்சரிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கட்சியை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், அது கடுமையாக இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக முக்கிய நிர்வாகிகளுடன் கமல் இன்று ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த இந்த ஆலோசனையில் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
கட்சியை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், அது கடுமையாகவும் இருக்கும் என்றும் கூறிய அவர் தேர்தலின் வெற்றி தோல்வி கட்சியின் நோக்கத்தை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments