தலைக்கனத்துடன் இருந்தால் தவிடுபொடி ஆகிவிடுவீர்கள்: மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பரபரப்பு, ஊரடங்கு, பசிபட்டினி என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் மத்திய அரசு சத்தமில்லாமல் தமிழகத்திற்கு எதிரான ஒருசில வேலைகளை செய்து வருவதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக தமிழக மக்களின் கவனத்தை கொரோனா பக்கம் திருப்பிவிட்டு காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு.
— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020